இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2017-ல் அடி எடுத்து வைக்கும் மேஷ ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் முக்கிய பலன்களை பார்ப்போம். எப்போதும் மேஷ ராசிக்கு ஒரு சிறப்பு உண்டு, அதாவது 12 ராசியில் இது முதலாவது ராசியாகும். மேஷ ராசியில் பிறந்தவர்கள் மிகவும் தைரியசாலிகள்.
இந்த வருடம் தான் நினைத்த காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் வேகமும் அதிகமாக இருக்கும். மற்றவர்களை உங்களுக்கு கட்டுப்பட வைக்க அதிக முயற்சி செய்வீர்கள். உங்களிடம் உள்ள கோப தாபங்களை குறைத்து கொண்டு பிறரிடம் அனுசரித்து சென்றால் மட்டுமே உங்களால் வாழ்க்கையில் பெரியதொரு முன்னேற்றத்தை அடையமுடியும். ஓயாத உழைப்பும் எப்போதும் வேலை அலைச்சலும் இருக்கும். வாழ்க்கை தேடல் அதிகம் இருக்கும். நேரம் பார்க்காமல் உழைப்பது உங்களின் பிறவி குணம், இருப்பினும் குடும்பத்தின் மேலும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். நாம் உழைப்பதே நம் வீட்டிற்கு தானே என்பதை ஒரு போதும் மறந்து விட வேண்டாம். உங்களின் மனதை அழுத்திக் கொண்டுருந்த பல பிரச்சனைகள் விலகும். சொத்து வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். மற்றவர்களிடம் ஒற்றுமையை வளர்த்து கொள்வீர்கள். உங்கள் பேச்சு திறமையும், பெருந்தன்மையும் பார்த்து மற்றவர்கள் அசந்து போவார்கள். புதியவர்களின் நட்பு ஏற்படும். வெளியில் கை மாற்றாக கொடுத்திருந்த பணம் திரும்ப வரும். ஒரு சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். உங்களின் மனக்கவலைகள் படிப்படியாக குறையும். ஒரு சிலருக்கு புது வீட்டிற்கு குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலர் சொத்து வழக்கில் பெற்ற வெற்றியின் மூலம் வருமானம் வரும். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். தெய்வ அனுக்கிரகமும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு. கையில் தாராளமான பண புழக்கம் இருந்து வரும். பெரிய மனிதர்கள் மற்றும் மகான்களின் சந்திப்பும் அதனால் ஒரு சில நன்மைகளும் நிகழ வாய்ப்புண்டு. குல தெய்வ வழிபாடு, மத சடங்குகள் போன்றவற்றை நிறைவேற்றி நிம்மதி பெற முடியும். பொன் நகைகள், நவீன அணிமணிகள் வாங்கி அணிந்து கொண்டு மகழ்ச்சி பெறுவீர்கள். ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு மன அமைதி பெறுவீர்கள். தெய்வீகமான விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி கொள்ளவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு அமையும். மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடல் நலத்தில் ஒரு சில தொந்தரவுகள் வரலாம், மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் எவ்வளவு தான் கையில் வந்தாலும், வீண் செலவுகள் நிறைய வரும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடைய நீங்கள் பிரச்சனை என்று வந்தால் அதை கடைசி வரை சந்தப்பீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டில் பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் நல்லுறவு ஏற்படும். பணியிடத்தில் உங்கள் மரியாதை உயரும். நீங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதே நேரம் சக ஊழியர்களின் நட்பையும் தக்கவைத்து கொள்ளவும். இருப்பினும் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். தொழிலில் படிப்படியாக வளர்ச்சி காணப்படும். தொழில், வியாபாரத்தில் நிதானமாக நடந்துகொண்டால் நல்ல லாபங்கள் அடையாளம். மற்றபடி தொழில் ரீதியாக வரும் போட்டிகளை எல்லாம் சாதுரியமாக சமாளீப்பீர்கள். ஒரு சிலர் சிறிய முதலீட்டில் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில், எந்த பிரச்சனையும் இருக்காது. புதிய முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம்.
எனவே இந்த 2017-ல் ஆண்டு உங்களுக்கு பொதுவாக நல்ல பலன்களே ஏற்படும்.
பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் செவ்வாய்கிழமையில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட உங்கள் கஷ்டங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தீரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2017ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831